ஜெயா பிளஸ் டிவியில் கலைஞரின் இறுதிச்சடங்கு நேரலை! அசத்திய தினகரன் குவியும்! பாராட்டு!

First Published Aug 9, 2018, 2:14 PM IST
Highlights

கட்சி வேறுபாடுகளை கடந்து கலைஞரின் இறுதிச் சடங்கு மற்றும் இறுதி அஞ்சலியை தொடர் நேரலையாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய விவகாரத்தில் தினகரனுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

கட்சி வேறுபாடுகளை கடந்து கலைஞரின் இறுதிச் சடங்கு மற்றும் இறுதி அஞ்சலியை தொடர் நேரலையாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய விவகாரத்தில் தினகரனுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. தமிழக அரசியலில் சுமார் 25 ஆண்டுகள் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா. 1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததது முதல் அவர் மறைந்த 2006ம் ஆண்டு வரை தமிழக அரசியலை பொறுத்தவரை இருவரும் எந்த சூழலில் எந்த விவகாரத்திலும் ஒரே நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அல்ல. தி.மு.கவிற்கு ஆதரவாக சன் டிவி செயல்பட்டு வந்த காலத்தில் அ.தி.மு.கவிற்காக ஜெயா டிவி கொண்டுவரப்பட்டது.

முழுக்க முழுக்க கலைஞர் எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு என்பது தான் ஜெயா டிவியின் தாரகமந்திரம். ஜெயா டி.வியில் வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதியை தீய சக்தி என்றே குறிப்பிட்டு அறிக்கைகள் வெளியாகும். ஜெயா டிவியில் எந்த காலத்திலும் தி.மு.கவிற்கோ அல்லது கருணாநிதிக்கோ ஆதரவாக ஒரு சிறிய துணுக்கு கூட வெளியானது இல்லை. மேலும் கருணாநிதியின் புகைப்படத்தை காட்ட வேண்டும் என்றாலும் கூட அதற்கு தகுந்த எதிர்மறை காரணம் இருக்க வேண்டும். இதே போல் தான் தி.மு.கவின் கலைஞர் தொலைக்காட்சியும். முழுக்க முழுக்க தி.மு.கவிற்கு ஆதரவாகவும் ஜெயலலிதாவிற்கு எதிராகவும் தொடங்கப்பட்டது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியிலும் எந்த காலத்திலும் ஜெயலலிதாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை பார்க்க முடியது. ஏன் ஜெயலலிதா மறைந்து இறுதி அஞ்சலி நாளில் கூட கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திற்கு உட்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் வழக்கமான நிகழ்ச்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தொடர்பான காட்சிகள் மட்டுமே செய்தியில் ஒளிபரப்பானது. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய போது மட்டுமே நேரலை செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது கூட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் கலைஞரின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்ககுள் தொடர் நேரலையாக ஒளிபரப்பாகின.

ஏன் கலைஞரின் இறுதி ஊர்வலம் கூட ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி என்று புகழாரமும் சூட்டப்பட்டது. இதை எல்லாம் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். காரணம் அரசியலில் எதிர் எதிர் துருவமாக இருந்தாலும் ஒரு முதுபெரும் தலைவனுக்கு ஜெயா பிளஸ் தொலைக்காட்சி நல்ல மரியாதை செய்துவிட்டது என்பது தான். மேலும் முழுக்க முழுக்க கலைஞரின் இறுதிச்சடங்குகளை ஒளிபரப்பு செய்ய தினகரன் அனுமதி கொடுத்த உடன் முறையாக ஒளிபரப்பாகிறதா என்பதையும் அவர் கண்காணித்துள்ளார்.

அத்துடன் கலைஞர் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது முதல் ஆளாக ஓடிச் சென்று தினகரன் மரியாதை செய்துவிட்டு வந்தார். இது போன்ற அரசியல் பாங்கு மற்றும் அரசியல் நாகரீகத்தால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலரும் தினகரனை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சில தீவிரமான அ.தி.மு.க தொண்டர்கள் அம்மாவால் தொடங்கப்பட்ட டி.வியில் அம்மாவின் மரணத்திற்க காரணமான சொத்து குவிப்பு வழக்கை நடத்திய தி.மு.க தலைவரின் இறுதி ஊர்வலத்தை எப்படி ஒளிபரப்பலாம் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

click me!