கருணாநிதி மீண்டும் சீரியஸ் !! காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் ….

 
Published : Jul 28, 2018, 01:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
கருணாநிதி மீண்டும் சீரியஸ் !! காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் ….

சுருக்கம்

karunanidh serious and will admit kauvery hospital

கருணாநிதியில் உடல் நிலை மீண்டும் சீரியஸ் ஆனதால் சிகிச்சைக்காக தற்போது அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கருணாநிதியின் உடல் மோசமடைந்ததாக செய்திகள் வெளியானது.  துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு  மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.

தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், உள்ளிட்டோர் நேரில் வந்து  நலம் விசாரித்துச் சென்றனர். குடியரசுத் தலைவர் , குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி, சந்திர பாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினிடம் போனில் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு கோபாலபுரம் இல்லம் திடீரென பரபரப்பானது. காவேரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவும், கருணாநிதியின் தனி மருத்துவரான கோபால் ஆகியோர் அவசரமாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, துர்கா ஸ்டாலின் மன்றும் உறவினர்களும், துரை முருகன், ஆ.ராசா ஆகியோர் தற்போது மீண்டும் கோபாலபுரம் வந்துள்ளனர். இதனால் கோபாலபுரம் பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இதையடுத்து கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிசை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரை அழைத்துச் செல்வதற்காக அந்த மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று தற்போது கோபாலபுரம் வந்துள்ளது.

அவரை காவேரி  மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!