
சசிகலாவின் தீவிர ஆதரவாளர் கருணாஸ். இதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்வதோடு, அதை தானே மனமுவந்து சொல்லியும் காட்டுவார்.
இந்நிலையில் இவர் எம்.எல்.ஏ.வாக இருப்பது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில். இந்த மாவட்டத்தின் செயலாளராக இருப்பவர் அமைச்சர் மணிகண்டன். கட்சி முழுக்க முழுக்க இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. எனும் முறையில் கருணாஸுக்கு அங்கே எந்த மரியாதையும் கிடைக்க மணிகண்டன் அனுமதிப்பதில்லை என்று கருணாஸ் தரப்பில் ஒரு பெரிய புகாரும், ஆதங்கமும் உண்டு. இதற்கு காரணம், கருணாஸ் சசியின் ஆதரவாளராக இருப்பதும், சினிமாக்காரரான அவரை இறங்கி ஆடவிட்டால் தன்னை ஓரங்கட்டிவிடுவார் எனும் பயம்தானாம்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திருவாடானை தொகுதியில் ஆய்வுக்கு சென்றிருக்கிறார் கருணாஸ். முன்கூட்டியே தகவல் சொல்லியும் எந்த அதிகாரியும் வரவில்லையாம்.
இதனால் நொந்து போன கருணாஸ் “மந்திரிக்குதான் இந்த மாவட்டத்துல மரியாதை. என்னை எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லை, நான் சொல்ற எதையும் கேட்கிறதுமில்லை.
நானும் ரெட்ட இலை சின்னத்துல நின்னு ஜெயிச்சவன் தானே? என்னை ஏன் மதிக்க மறுக்கிறார்கள்? ” என்று புலம்பிக் கொட்டிவிட்டு நகர்ந்திருக்கிறார்.
கருணாஸின் புலம்பலைக் கேள்விப்பட்ட அதே மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பாண்டி, அவருக்கு போன் போட்டு “எனக்கும் இதே நிலைதான்.” என்று வருந்தினாராம்.
அமைச்சர் மணிகண்டன் கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் அதற்காக எங்களின் குறைகளை எங்கள் எம்.எல்.ஏ.விடம் சொல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று ஆதங்கப்படுகிறார்கள் திருவாடானை தொகுதி மக்கள்.
மக்களின் இந்த ஆதங்கத்தை புரிந்து கொண்டிருக்கும் கருணாஸ் கூடிய விரைவில் அவர்களை திரட்டிக் கொண்டு அமைச்சர் அல்லது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் யோசனையில் இருக்கிறாராம்.
நடத்துங்க லொடுக்கு!