
மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பல வழக்கு பிரிவுகளில் வசமாக சிக்கி கொண்டதால் கைதாவது உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் ப.சிதம்பரத்துக்கு சொந்தமான மற்றும் அவரது உறவினர்களது காபி எஸ்டேட்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள எஸ்டேட்களில் மற்றும் தொழிற்சாலைகளில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் 9 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக கார்த்தி சிதம்பரத்திடம் இதற்கான சம்மன் வழங்கப்பட்டது.ப.சிதம்பரம் சென்னையில் இல்லததால் அவரிடம் நேரில் வழங்க முடியவில்லை என தெரிகிறது.
தற்போது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ளார். ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய ஷீனா போராவின் நிறுவனமான INX மீடியாவுக்கு பதவியில் இருந்த போது பல கோடி லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேடாக அனுமதி வழங்கினார்கள் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.
அதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட சம்மனில் ஜாமீனில் வெளிவரமுடியாத செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு சதி 120(B) மோசடி 420 லஞ்ச ஒழிப்பு 13(2), அரசு பதவில் இருந்து சொத்து சேர்த்தல் 13(1) 8 1D, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் தான் இவை.
மேலும் தற்போது கைதாகி திகார் சிறையில் உள்ள தினகரனுக்கும் இதே பிரிவுகளின் கீழ்தான் வழக்கு தொடுக்கப்பட்டது.
கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட சம்மனில் INX Media Private Ltd என்ற நிறுவனத்தின் இயக்குனர் இந்திராணி முகர்ஜி, மற்றும் பீட்டர் முகர்ஜி, ஆகியோருக்கும் குறுக்கு வழியில் உதவிகள் செய்து ஆதாயம் பார்த்ததாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்கெனவே இந்திரா முகர்ஜி சிக்கலில் உள்ள நிலையில் அப்போது எடுக்கப்பட்ட பல முக்கிய தகவல்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக திரும்பியுள்ளதாம்.
மாதக்கணக்கில் எடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் சிபிஐ தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறதாம்.
மேற்கண்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால்தான் மிக உயர்ந்த அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதமபரம் கைது செய்யப்படுவது உறுதி என அடித்து கூறுகிறார்கள் டெல்லி வட்டார அரசியல் நிபுணர்கள்.