சி.பி.ஐ எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை – கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி...

First Published May 16, 2017, 2:36 PM IST
Highlights
The CBI did not got any document


அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசு இந்த சோதனை முயற்சியை எடுத்துள்ளதாகவும், சி.பி.ஐ எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு அளவை குறைத்து காட்டி அனுமதி வழங்கி உள்ளதாக புகார் எழுந்தது.

இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் கார்த்தி சிதம்பரத்திடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசு இந்த சோதனை முயற்சியை எடுத்துள்ளதாகவும், சி.பி.ஐ எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோப்புகள் குறித்து விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!