
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாவார் என்றும் அதனால்தான் சொல்றேன் சிதம்பரம் கொஞ்சம் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தி வருகிறது
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என .பாஜக தேசிய செயலாளர் எச்,ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக அரசை எதிர்த்து ப.சிதம்பரம் மிக் கடுமையாக பேசி வருகிறார், உண்மைக்கு புறப்பான தகவல்களை தெரிவித்து வருகிறார் என குற்றம் சாட்டினார்.
அவர் இனிமேல் இப்படி பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்த எச். ராஜா, இப்ப பாருங்க அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ வளைகாப்பு போடப் போறாங்க என மிரட்டலாக பேசினார்.