வேட்டி அவுந்தது தெரியாமல் பேசிக் கொண்டே இருந்த முன்னாள் முதலமைச்சர்… அப்புறம் நடந்த சம்பவம்

Published : Sep 23, 2021, 08:53 AM IST
வேட்டி அவுந்தது தெரியாமல் பேசிக் கொண்டே இருந்த முன்னாள் முதலமைச்சர்… அப்புறம் நடந்த சம்பவம்

சுருக்கம்

கர்நாடகா சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்.

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்.

கர்நாடகாவில் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் 8வது நாள் கூட்டமான நேற்று தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. பின்னர் பூஜ்ய நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது மைசூர் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த சம்பவம் பற்றி பல்வேறு விஷயங்களை பற்றி கூறி கொண்டே வந்துள்ளார். அந்த தருணத்தில் தான் ஒரு விஷயம் நடந்தது.

பேச்சின் சுவாரசியத்தில் சித்தராமையா தமது வேட்டி அவிழ்ந்தது பற்றி கவனிக்காமல் இருந்திருக்கிறார். இதை அதே வரிசையில் உட்கார்ந்திருந்த காங். மாநில தலைவர் டிகே சிவக்குமார் கவனித்து சில விநாடிகள் காத்திருந்தார்.

ஒன்றும் நடக்கவில்லை… வேட்டியை சரி செய்யாமல் முன்னை காட்டிலும் சுவாரசியத்துடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார் சித்தராமையா. ஒரு கட்டத்தில் அவர் அருகே சென்ற சிவக்குமார், உங்க வேட்டி அவிழ்ந்துவிட்டது என்று காதை கடித்திருக்கிறார்.

அதன் பின்னர் தான் அவருக்கு விஷயமே விளங்க உடனடியாக அதை சரி செய்திருக்கிறார். அப்போது தமது பேச்சை நிறுத்தாமல் அமைச்சர் ஈஸ்வரப்பாவை பார்த்து வேட்டி அவிழ்ந்துவிட்டது, உடல் எடை கூடியும் சில சமயம் இப்படிநடந்து விடுகிறது என்று தெரிவித்திருக்கிறார். நடந்த இந்த சம்பவம் காரணமாக அவை சிறிது நேரம் கலகலப்பாக காணப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!