122 பேர் 12 பேரிடம் போய் கெஞ்சுவதா? - கொந்தளிக்கும் புகழேந்தி...

First Published Apr 20, 2017, 6:32 PM IST
Highlights
Karnataka Secretary of State has raised questions about whether 12 of the 122 MLAs have been asked to go to Ettapadi


எடப்பாடி ஆட்சியில் 122 எம்.எல்.ஏக்கள் இருக்கும்போது 12 பேரிடம் போய் கெஞ்சுவதா என கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

எடப்பாடி பழனிசாமி அணியும் ஒ.பி.எஸ் தரப்பு அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை எப்போது என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே  சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் தினகரனை கட்சியில் ஒதுக்குவதாக அமைச்சர்கள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜெயக்குமார் அறிவித்தார். 

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தினகரனை நீக்கியது குறித்து ஒ.பி.எஸ் பேசுகையில், தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என தெரிவித்தார்.

இதை கிண்டல் செய்யும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், கட்சி நலன் கருதியே தினகரனை விலக்கினோம் என்றும் ஒ.பி.எஸ் நிர்பந்தத்தால் விலக்கவில்லை எனவும்  தெரிவித்தார்.

மேலும் தம்பிதுரை பேசுகையில், எடப்படியே முதலமைச்சர் என தெரவித்தார்.

தம்பிதுரை, ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்தார்.

நாங்கள் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை எனவும், ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை வேண்டும் என்றே வலியுறுத்தினோம் எனவும் முனுசாமி தெரிவித்தார்.

மேலும், சசிகலாவையும் தினகரனையும் நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், சசிகலா பொதுச்செயலாளர் என்ற பிரமான பத்திரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கோரிக்கையை நிறைவேற்றினார் பேச்சுவார்த்தை என்றும், இல்லையென்றால் மக்களை சந்தித்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தினகரனை கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அடையாரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதையடுத்து புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

அம்மாவால் ஒதுக்கிவைக்கபட்டவர் தான் முனுசாமி. ஒ.பி.எஸ் தரப்பினர் அமைச்சர்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசுகின்றனர்.

கே.பி.முனுசாமி பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தி வைத்துவிட்டார். 122 பேர் 12 பேரிடம் போய் கெஞ்சுவதா?

இப்படி பேசுபவர்களிடம் தஞ்சம் அடைந்து அரசு வண்டிகளில் போக வேண்டுமா?

என பல்வேறு கேள்விகளை அடுக்கினார் புகழேந்தி.

 

click me!