இணைப்பை டமால் டுமீல் ஆக்கிய ஒ.பி.எஸ்.அணி... சசிகலா குரூப்பின் நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்த முனுசாமி

First Published Apr 20, 2017, 6:28 PM IST
Highlights
KP Munusamy Speach against Dinakaran in Latest Interview


நான் அடிக்கிற மாதிரி அடிக்கிற நீங்க அழுகுற மாதிரி அழுகுங்க என்பதைப் போல இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் இரவுவரை அதிமுகவில் சகலமும் நானே என்று மார்தட்டி வந்த டிடிவி.தினகரன், விடிந்ததும் கட்சி என்னால் உடைய வேண்டாம் என்று ஜகா வாங்கினார்.

உண்மையிலேயே தினகரன் ஒதுங்கிவிட்டார் என்று மக்கள் நம்பத் தொடங்கிய நிலையில் குண்டைத் தூக்கி போட்டு அதிர்ச்சி அளித்திருக்கிறார் கே.பி.முனுசாமி.

தினகரனை வெளியேற்றியது போல நடித்து எடப்பாடி அணியினர் நாடகமாடுவதாக கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்ட, உண்மையில் என்ன தான் நடக்கிறது என்று தலையை சொறிய ஆரம்பித்துள்ளனர் தமிழக மக்கள்.

அந்நிய செலாவணி வழக்கில் மத்திய அரசின் பிடி இறுகியதை அடுத்து வேறு வழியின்றி கட்சியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறினார் என்ற டாக் உண்டு. ஆனால் உண்மையில் அது காரணம் அல்ல என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல் அமைச்சர் எடப்பாடியுடனான சந்திப்புக்குப் பிறகு மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேராக டிடிவியின் இல்லத்திற்குச் சென்றனர். அப்போது நடைபெற்ற ஆலோசனையில், தற்போதைக்கு நிலைமை சரியில்லைங்க. உங்கள பிரதானப்படுத்தினா அரசுக்கே ஆபத்துவிடும் என்று கவலை தோய்ந்த முகத்தோடு அமைச்சர்கள் பேசினார்களாம்.

எல்லாவற்றையும் பொறுமையா கேட்ட தினகரன், சரி நா அடிக்கிற மாதிரி அடிக்கற நீங்க அழுகுற மாதிரி அழுகுங்க என்பதைப் போல, நான் கட்சியில் இருந்து வெளியேற மாதிரி வெளியேறுகிறேன், நீங்க அத டெவலப் பன்னிக்குங்க என்றாராம்..

இதனைத் தொடர்ந்தே தம்பிதுரை தினகரன் வெளியேறியதற்கு வரவேற்பு தெரிவித்தார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.. சரி விசயத்திற்கு நேராகவே வருவோம். தினகரன் வெளியேறியதும், முதலில் பேச்சுவார்த்தை நடத்தவே ஓ.பி.எஸ்.அணி திட்டமிட்டார்களாம்.

ஆனால் கட்சியில் தினகரனின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும் அவர் முழுமையாக வெளியேறும் வரை இணைப்பு படலம் நடைபெறாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

தமிழக அரசியல் களேபரங்களை நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் இது உலக மகா நடிப்பு டா சாமி என்ற டயலாக்குடன் தான் பொருந்தி பார்க்க முடிகிறது. 

click me!