கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் ! அமித்ஷா உத்தரவு !!

Published : Aug 20, 2019, 10:40 PM IST
கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் ! அமித்ஷா உத்தரவு !!

சுருக்கம்

ர்நாடகா மாநிலத்தின் பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்  இதற்கான  உத்தரவை பாஜக தலைவர் அமித் ஷா  பிறப்பித்துள்ளார்.  

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து,  கர்நாடக பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரது அழைப்பை ஏற்று முதலமைச்சராக  மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

கர்நாடக மாநில பாஜக தலைவராக இருந்த எடியூரப்பா, தற்போது அம்மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டதால்  கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் 

இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா பிறப்பித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு