காஷ்மீர் பிரச்சனையில் மோடி அரசுக்கு எதிராக திமுக போராட்டம் ! பெரிது படுத்தி விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ரேடியோ !!

By Selvanayagam PFirst Published Aug 20, 2019, 9:56 PM IST
Highlights

காஷ்மீர் பிரச்சனையில் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாள் திமுக சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதனை பாகிஸ்தானில் உள்ள ரேடியோக்களும், பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன.
 

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து, சென்னை, அறிவாலயத்தில், திமுக  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, சில கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்தின. 

இதையடுத்து காஷ்மீர் தலைவர்களான, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர், ஜனநாயகத்தின் குரலாக நின்று, மக்களுக்கு அரும் பணியாற்றியவர்கள்.

மத்திய அரசு, அவர்களை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளது; அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை, பாஜக அரசு, சர்வதேச பிரச்னையாக்கி விட்டது. 

அக்கட்சிக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, அனைத்து தலைவர்களையும், மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி, டெல்லி ஜந்தர்மந்தரில், திமுக  உட்பட அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த போராட்ட அறிவிப்பை பாகிஸ்தான் ரேடியோக்களும், பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன. 

அதில் கடந்த  தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான திமுக டெல்லியில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்கான மோடி அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதாக அப்பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை கடுமையாக கண்டித்துள்ளார் என்றும் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஸ்டாலின் தெரிவித்திருப்பதையும் பாகிஸ்தான் ஊடகங்கள் விளம்பரம் செய்து வருகின்றன.

click me!