கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இதனையடுத்து, முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். 14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பாஜக ஆட்சி பொறுப்பேற்றார்.
undefined
அதனையடுத்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில் 17 எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைந்தனர். இதில், 13 பேருக்கு மீண்டும் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி அந்த எடப்பாடிக்கு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதுபற்றி சபாநாயகரிடம் திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் 11 எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க;-
இதனையடுத்து, சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க. தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தி.மு.க. கொறடா சக்கரபாணி, வெற்றிவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த இரண்டு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகிய அமர்வு விசாரித்து வந்தது.
இதற்கிடையே மேற்கண்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றதால் வழக்கு கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணை தற்போது நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உளள்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக தீர்ப்பை அடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் அமெரிக்காவில் இருந்தாலும் நிம்மதி இல்லாமல் பீதியுடன் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.