சிவகுமாரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் நரிமன் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருப்புப் பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் கருப்புப் பண மோசடி வழக்கில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போதும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
undefined
இதனையடுத்து, ஜாமீனில் இருந்து வெளியே வந்த அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சிவகுமாரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் நரிமன் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வழக்கின் வாதங்களையே, டி.கே.சிவகுமார் வழக்கிலும் அமலாக்கத்துறை காப்பி- பேஸ்ட் செய்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.