
காவிரி நதிநீர் வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என தெரிவித்துவிட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை சீராய்வு செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது தொடர்பாக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாளை தமிழக அரசு விவாதிக்க உள்ளது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.