கமல் எங்களுக்கு நல்லது செய்வார்! மீனவ சங்க பிரதிநதி போஸ் அதிரடி பேச்சு!

 
Published : Feb 21, 2018, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
கமல் எங்களுக்கு நல்லது செய்வார்! மீனவ சங்க பிரதிநதி போஸ் அதிரடி பேச்சு!

சுருக்கம்

Kamal will do us good! Fishermen Association Bose Speech!

தமிழக மீனவர்கள் பிரச்சனைகளை கமல் கையில் எடுத்துள்ளதால் எங்கள் பிரச்சனை உலக அளவில் பேசப்படும் என்று மீனவர்வர்கள் சங்க பிரநிதிபோஸ் கூறியுள்ளார்

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி கமலஹாசன் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து அவர் சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தார். அங்கு கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சரியாக 7.35  மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வீட்டிற்கு  சென்றார். அவரை அப்துல் கலாமின் பேரன் சலீம் வரவேற்று அமர வைத்தார். அப்துல் கலாமின் சகோரர் முத்து மீரான் மரைக்காயர் கமலஹாசனை  வரவேற்றார். அவரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். இதைனையடுத்து முத்து மீரான் மரைக்காயரின் மனைவி மற்றும் உறவினர்கள் கமலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படடார். தனியார் விடுதியில் கமலை சந்தித்த மீனவர்கள் சங்க பிரநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர். கலந்துரையாடல் ரத்தானதால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமலுடன் மீனவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மீனவ சங்க பிரநிதி போஸ் பேசும்போது, இலங்கை அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகை விடுவிப்பதற்கு 2 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால், இதனை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. தற்போது நாங்கள் மீன் பிடிக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். அரசாங்கம் எங்களுக்கு ஒரு மாற்று வழி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், அரசு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து மத்திய அரசு பலமுறை கூட்டத்தைக் கூட்டி எங்களை அலைக்கழித்து வருகிறது. எங்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது, உங்களை மடியேந்தி பிச்சைக் கேட்கிறேன், அங்கே போய் மீன் பிடிக்காதீர்கள் என்று கேட்கிறார். மீனவர்கள் பிரச்சனைகளை கமல் கையில் எடுத்துள்ளதால் எங்கள் பிரச்சனை உலக அளவில் பேசப்படும். மீனவர்களைப் பொறுத்தவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற எண்ணம் உள்ளது. எங்களுக்கு சாதகமாக இருந்தால் இணைந்து செயல்படுவோம். என்று மீனவர் சங்க பிரநிதி போஸ்  
கூறினார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்