Karnataka Election 2023 : கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பும்; கட்சிகள் முன்பு இருக்கும் சவால்களும்!!

By Dhanalakshmi GFirst Published Mar 29, 2023, 3:38 PM IST
Highlights

நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துவிட்டது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபை மற்றும் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சருக்கான தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது என்ற இடத்தில் கிங் மேக்கராக மதச்சார்பற்ற ஜனதா தளம் இருந்தாலும் ஆச்சரியமில்லை. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து,  2019, ஜூலை மாதம் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளியேறினர். இவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பின்னர் பாஜகவில் இணைந்தனர்.  சட்டசபையில் தற்போது பாஜகவுக்கு 121 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 70,  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 30 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பாஜக தனது பதவிக்காலத்தில் முதல்வரை மாற்றியது. பிஎஸ் எடியூரப்பா ஜூலை 2021-ல் ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மறுபுறம், தனது கோட்டையாக இருந்த கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற  நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்துவதுடன், அதன் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கிய 124 வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க..புது ரூட்டில் திரும்பிய ஓபிஎஸ்.. நிம்மதியா விடமாட்டாங்க போலயே - புலம்பும் எடப்பாடி பழனிசாமி

பாஜக அரசின் தோல்விகள் மற்றும் ஊழலை முன்னிலைப்படுத்தி, நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் வாக்குறுதி அளித்து வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்  தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், இரு முக்கிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமான முடிவை இந்தக் கட்சி எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சமமான நிலைப்பாட்டை இதுவரை எடுத்து வருகிறது.

அதே நேரத்தில் தனது பாரம்பரிய கோட்டை திகழும் பழைய மைசூர் பிராந்தியத்திற்கு அப்பால் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. விவசாயிகள் நலன், பிராந்திய வளர்ச்சி மற்றும் சமூக நீதி போன்ற பிரச்சினைகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கவனம் செலுத்தி வருகிறது. கர்நாடக மாநில தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானதாக கருதப்படுகிறது. முதலாவதாக, இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பொருளாதார ரீதியாக முக்கிய மாநிலமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. இரண்டாவதாக, இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் பிரதிபலிக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் வாய்ப்புகளை வலுப்படுத்துவதாக, தீர்மானிப்பதாக இருக்கும். 

மூன்றாவதாக, இந்த தேர்தல் பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் எந்த மாதிரியான ஆடை அணிய வேண்டும். எந்த மாதிரியான இ=உணவை உண்ண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது தேர்தலில் பிரதிபலிக்கலாம் என்று கூறப்படுகிறது. கிறிஸ்துவர்கள் மதமாற்றம், திப்பு சுல்தான் மற்றும் இந்துத்துவா சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கர் குறித்து விவாதங்களில் ஈடுபட்டது ஆகியவையும் தேர்தலில் எதிரொலிக்கலாம்.

மேலும், பாஜக பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருவதும் சவாலாக இருக்கலாம். இவற்றுக்கு மேலே, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓரம் கட்டி விட்டு, ஜாதி ரீதியிலான தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என பல்வேறு காரணங்கள் இந்த முறை பாஜகவுக்கு சவாலாகவே அமைந்துள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது

click me!