காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

By vinoth kumar  |  First Published Aug 25, 2020, 6:38 PM IST

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி  கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

 

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ட்விட்டர் பதிவில்;- எனக்குக் காய்ச்சலும், இருமலும் லேசாக இருந்தது. இதையடுத்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

உங்கள் வாழ்த்துகள், ஆசிகளுடன் விரைவில் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!