கராத்தே தியாகராஜன், சிவாஜி மகன் ராம் குமார் இன்று பாஜகவின் இணைகின்றனர்.. பிரமாண்ட பொது கூட்டம் ஏற்பாடு.

Published : Feb 11, 2021, 10:26 AM IST
கராத்தே தியாகராஜன், சிவாஜி மகன் ராம் குமார் இன்று பாஜகவின் இணைகின்றனர்.. பிரமாண்ட பொது கூட்டம் ஏற்பாடு.

சுருக்கம்

திருவான்மியூர் வடக்கு மாட வீதி மருந்தீஸ்வரர் கோவில் அருகில்  நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று மாலை 4  மணிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் அவர்கள் பாஜாகாவில் இணைகிறார். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு சி டி ரவி அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிடத் துணைப் பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் முன்னிலையில் அவர் இணைய உள்ளார். இன்று தமிழக பாஜகவின் முக்கிய நிகழ்ச்சி நிரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதின் விவரம்.

இன்று காலை 07.30 மணி அளவில் தமிழக பாஜக மாநில சட்டமன்ற தேர்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு மெட்ரோ ஆபிஸ் எதிரில் யாக பூஜையுடன் நடைபெற்றது. தமிழக பாஜக மாநில தேர்தல் தலைமை அலுவலகத்தை தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் எல் முருகன், தேசிய பாஜக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி அவர்கள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர். 

தமிழக பாஜக இணை பொறுப்பாளர்  சுதாகர் ரெட்டி, மாநில அமைப்புச் செயலாளர், கேசவவிநாயகன் மாநிலத் துணைத் தலைவர்கள் வி‌பி.துரைசாமி , எம்.என்.ராஜா, சக்கரவர்த்தி. மாநில பொதுச்செயலாளர்கள் கரு நாகராஜன், கேடி ராகவன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்த காலை 11.30 மணி அளவில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்  ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகாமையில் தமிழக பாஜக முதல் பிரச்சாரக் கூட்டம் துவங்க உள்ளது.  அதைத்தொடர்ந்து துறைமுக சட்டமன்ற தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்திற்கு மற்றும் திறப்பு விழாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களும் அகில பாரத பொதுச்செயலாளர் சி.டி.ரவி அவர்களும் மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பி சுதாகர் ரெட்டி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.மாலை 4 மணி அளவில் 
தமிழக பாஜக மாநில அலுவலகம் கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் திரு எல். முருகன் அவர்கள், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிடத் துணைப் பொறுப்பாளர், சுதாகர் ரெட்டி அவர்கள் முன்னிலையில் மறைந்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவருடைய மூத்த மகன் ராம்குமார் அவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இணைய உள்ளார்கள். மாலை 06.00 மணி அளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் அவர்கள். 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் திரு. L. முருகன் ,பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்
சிடி ரவி அவர்கள், மற்றும்  தமிழக பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திருவான்மியூர் வடக்கு மாட வீதி மருந்தீஸ்வரர் கோவில் அருகில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!