#BREAKING திமுகவுக்கு ஆதரவு இல்லை... வான்டடாக போய் அசிங்கப்பட்ட கருணாஸின் அதிரடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 9, 2021, 3:05 PM IST
Highlights

கருணாஸை தொடர்ந்து எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது.


​தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியன குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். நான் சசிகலாவின் ஆதரவாளன் என்பதால் அதிமுக தன்னை ஒதுக்குவதாகவும், முக்குலத்தோர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றும் அடுத்தடுத்து குற்றச்சாட்டினார். 


மேலும் முக்குலத்தோர் அதிகம் உள்ள 84 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் தங்களது ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கருணாஸை தொடர்ந்து எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது. இரு கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்யும் படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆதரவு கடிதம் அளித்தும், திமுக எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காதது கருணாஸ், தமிமுன் அன்சாரியை எரிச்சலடைய செய்துள்ளது. எனவே திமுகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ், தமிமுன் அன்சாரி கட்சிகள் அறிவித்துள்ளன. 
 

click me!