இதை உருவாக்கிய மோடியையும், இ.பி.எஸ்.ஸையும் மக்கள் தூக்கி தூர எறியுங்கள்... கர்ஜிக்கும் கனிமொழி..!

Published : Apr 07, 2019, 02:42 PM IST
இதை உருவாக்கிய மோடியையும், இ.பி.எஸ்.ஸையும் மக்கள் தூக்கி தூர எறியுங்கள்... கர்ஜிக்கும் கனிமொழி..!

சுருக்கம்

கருணாநிதி இருந்தவரையில் மக்களை சந்திக்காமல், ‘ராஜ்யசபா’ எனும் பைபாஸ் வாசல் வழியே நாடாளுமன்றத்தினுள் செட்டிலானார் கனிமொழி. ஆனால் அப்பா மறைந்ததும் நேரடி அரசியலுக்குள் இறங்கி நிற்கிறார். இது அண்ணன் போட்ட உத்தரவா? அல்லது தண்டனையா? அல்லது கனிமொழியின் சுய விருப்பமா! என்று கழகத்தினுள் தனி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. 

கருணாநிதி இருந்தவரையில் மக்களை சந்திக்காமல், ‘ராஜ்யசபா’ எனும் பைபாஸ் வாசல் வழியே நாடாளுமன்றத்தினுள் செட்டிலானார் கனிமொழி. ஆனால் அப்பா மறைந்ததும் நேரடி அரசியலுக்குள் இறங்கி நிற்கிறார். இது அண்ணன் போட்ட உத்தரவா? அல்லது தண்டனையா? அல்லது கனிமொழியின் சுய விருப்பமா! என்று கழகத்தினுள் தனி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. 

இருந்தாலும் கூட, தேர்தல் வைபரேஷன் துவங்குவதற்கு சில மாதங்கள் முன்பேயே தூத்துக்குடியில் சென்று செட்டிலாக், கனிமொழி செயல்பட துவங்கியது ஆரோக்கியமான மூவ் தான். கனிமொழியை எதித்து அங்கே பி.ஜே.பி.யின் தமிழக தலைவர் தமிழிசை இறங்கியிருப்பதும், குறுகிய நாட்கள் பிரசாரத்திலேயே அவர் ஏகத்துக்கும் முன்னேறி வருவதும் அசால்ட் அரசியல்தான். பி.ஜே.பி.யை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க., உட்கட்சி முக்கியஸ்தர்களின் திரைமறைவு வேலை...என இவை எல்லாவற்றையும் தாண்டி பிரசாரத்தில் பின்னிப் பேர்த்தெடுத்து வருகிறார் கனிமொழி. இந்நிலையில் சமீபத்தில் மோடி, இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கனிமொழி கர்ஜித்திருப்பதன் ஹைலைட்ஸ் இதோ...

* லோக்சபாவில் போட்டியிட்டால், ஏராளமான மக்களின் தேவைகளை, பிரச்னைகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்  அதனாலேயே இந்த முறை தேர்தலுக்குள் இறங்கினேன். 

* தூத்துக்குடியை நானேதான் விருப்பப்பட்டு கேட்டேன், அந்த மாவட்ட வளர்ச்சியில் நான் காட்டிய ஈடுபாடு, அக்கறையை பார்த்துவிட்டு தலைமையும் ஏற்றுக் கொண்டு சீட் கொடுத்திருக்கிறது. 

* பொருளாதார அடிப்படையில் பத்து சதவீத இடம் ஒதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றக் கொண்டுவரப்பட்ட திட்டம். 

* அடித்துச் சொல்கிறேன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது போல், காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தவுடன் தமிழக்த்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு தருவோம், தந்தே தீருவோம். 

* மத்திய அரசின் அடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்த மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டது. அனைத்து துறைகளுமே ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன. நீட் தேர்வை தமிழகத்தினுள் வன்மமாக புகுத்தியபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து வாய் மூடிக் கிடந்தது பழனிசாமி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்கெடுத்து, வேலைவாய்ப்பின்மையை உருவாக்கி, பன்முகத்தன்மையை கெடுத்து, பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து இந்த தேசத்தை சீரழித்துவிட்டது மத்திய அரசு. எடப்பாடி அரசு, மோடி அரசு இரண்டையும் இந்த தேர்தலின் மூலம் தூக்கி தூர எறிவர் மக்கள். 

* பதினெட்டு தொகுதி இடைத்தேர்தலின் மூலம் ஆட்சியில் அமர்வார் அண்ணன் ஸ்டாலின். 

* எங்களை ஊழல் கட்சி என்று பொய்யாக விமர்சிப்பதன் மூலம் தன் மீது வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் கமலை பார்த்தால் பரிதாபமாய் இருக்கிறது. குறை சொல்வது எளிது, நிரூபியுங்கள். 

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணிக்குள் வரும் 3 கட்சிகள்.. காங்கிரசுக்கு கல்தா..! மு.க.ஸ்டாலினின் அதிரடி வியூகம்..!
வடமாநில பெண்கள் படிக்காத அடிமைகள்.. திராவிட மாடல் பெண்கள் மெத்த படித்த மேதாவிகள்..! சீண்டிய தயாநிதி மாறன்..!