ஓடோடி வந்த கனிமொழி... கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி..!

Published : Sep 22, 2021, 01:49 PM ISTUpdated : Sep 28, 2021, 11:46 AM IST
ஓடோடி வந்த கனிமொழி... கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி..!

சுருக்கம்

தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில், பகிர்ந்ததால், எடப்பாடி பழனிசாமி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். 

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு பிறகு ஆர்.என்.ரவி கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை ராஜ்பவனில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு எட்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. 

இதனை தெரிந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தன் இருக்கையில் இருந்து எழுந்து போய், எடப்படி பழனிசாமிக்கு அருகில் இருந்த  நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டு அவருடன் உட்கர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இதனை கவனித்த தி.மு.க., மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி எழுந்து சென்று எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, 'முதல் வரிசையில் உங்களுக்கு இருக்கை ஒதுக்கி இருக்கிறது.  நீங்கள், அங்கே சென்று அமருங்கள்' என சொல்லி இருக்கிறார். 

இதனால் பரவசப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ''அதெல்லாம் வேண்டாம்’ என மறுத்து விட்டார். பிறகு இந்த நிலைமையை அதிகாரிகளிடம் கனிமொழி எடுத்துச் சொல்லி இருக்கிறார். பதறியடித்து வந்த அதிகாரிகள், முதல் வரிசையில் வந்து அமருங்கள் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதனை எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளவே இல்லை. 

இந்த சம்பவத்தை தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில், பகிர்ந்ததால், எடப்பாடி பழனிசாமி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!