ஜனநாயக கடமையாற்ற ஆம்புலன்ஸில் வந்த கனிமொழி... வைரல் வீடியோ...!

Published : Apr 06, 2021, 07:20 PM ISTUpdated : Apr 06, 2021, 07:27 PM IST
ஜனநாயக கடமையாற்ற ஆம்புலன்ஸில் வந்த கனிமொழி... வைரல் வீடியோ...!

சுருக்கம்

சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பாதுகாப்பு உடையணிந்து தனது வாக்கினை செலுத்தினார் 

கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் 1 மணி நேரமே உள்ள நிலையில் இறுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது வாக்கினை செலுத்தினார்.  

 பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்றினார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ உடை அணிந்து வந்து பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ்சில் வந்து வாக்களித்தனர். சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் இன்றைய தினம் பாதுகாப்பு உடை அணிந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!