சபாஷ் சரியான போட்டி !! தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் இறங்கப் போகும் பொது வேட்பாளர் !! தமிழிசை இல்ல !!

Published : Mar 14, 2019, 10:00 PM ISTUpdated : Mar 14, 2019, 10:03 PM IST
சபாஷ் சரியான போட்டி !! தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் இறங்கப் போகும்  பொது வேட்பாளர் !! தமிழிசை இல்ல !!

சுருக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியை களமிறக்க திமுக முடிவு செய்துள்ள நிலையில் தற்போது திடீர் திருப்பமாக திமுகவுக்கு எதிராக பொது வேட்பாளராக மு.க.அழகிரி நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிறுத்தப்படப் போவதாக தெரிகிறது.

கனிமொழி கடந்த சில மாதங்களாகவே தூத்துககுடி தொகுதியில் முகாமிட்டு களப் பணிகளை ஆற்றி வந்தார். அவர் தேர்தலில் நிற்பதற்காகவே ஓராண்டாவே பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக அணியில் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே தூத்துக்குடி தொகுதியை பாஜகவுக்குக் கொடுக்க வேண்டாம் அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஏனென்றால் கனிமொழியை தோற்கடித்து ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என அதிமுகவும் பாஜகவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளன.


அதன்படி மு.க. அழகிரியை தூத்துக்குடியில் நிறுத்தி அவருக்கு ஆதரவு அளிக்க  அதிமுக பாஜக சார்பில் ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அழகிரியை பாஜகவின் மேலிடப் புள்ளிகள் சிலர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், ‘அரசியலில் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும்  என்று அழகிரியை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் பிரைன் வாஷ் செய்து வருகின்றனர்.ஆனால் இதற்கு உடனடியாக பதில் சொல்லாத அழகிரி தற்போது போட்டியிடும் மனநிலைக்க வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அவர் வைத்திருக்கும ஒரு கண்டிஷன், தூத்துக்குடி தொகுதியில நின்னா என்னை திமுகவுக்கு எதிரான பொது வேட்பாளராக பிஜேபியும், அதிமுகவும் ஆதரிக்கவேண்டும் என்பது தான். ஆனாலும், இந்த விஷயத்தில் தீர்மானமாக முடிவெடுப்பாரா என்று அதிமுகவினரும், பாஜகவினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!