கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரேமலதா! வீடு தேடி வந்த பாமகவால், வெற்றிக்கனவில் தேமுதிக...

By sathish kFirst Published Mar 14, 2019, 8:30 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி தொகுதியில் ஜெயிக்கப்போவது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனா, தேமுதிக தலைவர் மனைவியா? என்ற பேச்சு பரவிவருகிறது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் ஜெயிக்கப்போவது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனா, தேமுதிக தலைவர் மனைவியா? என்ற பேச்சு பரவிவருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக பிரேமலதா களமிறக்க இருப்பதாக  செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று,  இந்த தொகுதியில் தேமுதிக, பாமக வாக்கு வங்கி பலமாக இருப்பதாலும், திமுகவும் பலம் வாய்ந்து இருப்பதாலும் கள்ளக்குறிச்சியின் கள நிலவரத்தை ஆய்வு செய்தார்.

இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, விழுப்புரம் தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதிமுக அணியில் கிடைத்தது நான்கே சீட்டுகள் என்பதால் அனைத்திலும் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறாராம் பிரேமலதா. 

அந்த வகையில் கள்ளக்குறிச்சி பற்றி ஆலோசனை நடத்தியபோது, அங்கே திமுக சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி போட்டியிடத் தயாராகி தொகுதியில் வேலை செய்யத் துவங்கிவிட்டார்கள் என பிரேமலதாவிடம் சொன்னாராம் வெங்கடேசன்.  அதுமட்டுமல்ல, பொன்முடி மகனைத் தோற்கடிக்கணும்னா நீங்க நின்னா சரியா இருக்கும் என  தேமுதிக நிர்வாகிகளே விரும்புவதாகவும் பிரேமலதாவிடம்  சொல்லியிருக்கிறார் வெங்கடேசன்.

இது ஒரு புறமிருக்க இன்று பாமக நிறுவனர் ராமதாஸே தனது மகன் அன்புமணி, அதிமுக அமைச்சர்கள் மற்றும் பாமக முன்னணி தலைவர்கள் என கூட்டாக வீடு தேடி வந்து விஜயகாந்த்தை சந்தித்ததால், வட மாவட்டங்களில் உள்ள பாமக வாக்கு வங்கி சிதறாமல் கிடைக்கும் என ஊறுதியாக இருக்கிறாராம். 

click me!