வைகோவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா கனிமொழி?

By Asianet TamilFirst Published Feb 15, 2019, 5:07 PM IST
Highlights

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கனிமொழிக்காக அங்கே போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கனிமொழிக்காக அங்கே போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விருதுநகர் தொகுதியில் 2009, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வைகோ தோல்வியடைந்தார். இதனால், இந்த முறை மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட வைகோ ஆர்வம் காட்டவில்லை. விருதுநகர் தொகுதிக்கு அடுத்த வைகோ போட்டியிட விரும்பியது தூத்துக்குடி தொகுதியில்தான். 

ஆரம்பம் முதலே தூத்துக்குடியில் மதிமுகவுக்கு கணிசமான ஆதரவு உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக 1.81 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. மேலும் ஸ்டெர்லைடுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதால் வைகோ மீது அந்தப் பகுதி மக்கள் கரிசணம் காட்டுவதும் உண்டு. எனவே இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவே வைகோ விரும்பியிருக்கிறார். 

ஆனால், கனிமொழி அந்தத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்பதை அறிந்த உடனேயே அந்தத் திட்டத்தை வைகோ கைவிட்டுவிட்டார் என்கிறார்கள் மதிமுகவினர். தனக்கு சாதகமான தொகுதி என்று வைகோ சில தொகுதிகளை பட்டியலிட்டபோதுதான் திருச்சியைத் தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார்கள் மதிமுகவினர். தனக்கு தூத்துக்குடி தொகுதியை விட்டுக்கொடுத்ததால்தான் வைகோ விரும்பும் திருச்சி தொகுதியைப் பெற்றுதர ஸ்டாலினிடம் கனிமொழி பேசியதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. 

அது உண்மைதான் என்று சொல்லும் மதிமுகவினர்,  தற்போதைய நிலையில் திருச்சியில் வைகோ  நிச்சயம் களமிறங்குவார் என்று உறுதியாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்கள்.

click me!