முதல் பேச்சிலேயே கடவுள் சென்டிமெண்ட்... பாஜக வெறுப்பை தகர்க்க பிட்டைபோட்ட கனிமொழி..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2019, 6:08 PM IST
Highlights

தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ள கனிமொழி தனது முதல் பேச்சிலேயே கோவில்களில் உள்ள சிலைகள் மீது அக்கறை காட்டி பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களவையில் பேசிய அவர், ’’தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோவில்களில் பழமையான சிலைகள் பழம்பெருமை மிக்க கலைப்பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் எந்தெந்த கோவில்களில் என்னென்ன பழங்கால சிலைகள் உள்ளன என்பதற்கு முறையான முழுமையான பதிவுகளோ ஆவணங்களோ இல்லை’’ என அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல், ‘’கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 40 பழம்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை.

வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய கலைப்பொருட்கள் ஆபரணங்கள் குறித்த தகவல் இந்திய தொல்லியல் துறை வசம் இல்லை. அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள பழங்கால சிலைகளைப் பொறுத்தவரை அதுகுறித்து தகவல்களை மாநில அரசு திரட்ட முடியும்’’ என கூறினார்.

பொதுவாக கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டது திமுக. கருணாநிதி குடும்பம் கோயில்களை கொடியவர்களின் கூடாரம் என பலிக்கும். கடவுள் மறுப்பு கொள்கையை ஆயுதமாக வைத்து கட்சி நடத்தி வரும் கருணாநிதி குடும்பத்தில் இருந்து முதன் முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைத்துள்ள கனிமொழி தனது முதல் பேச்சிலேயே கடவுள் சிலைகளை பற்றி பேசி தனது தொடக்கத்தை ஆரம்பித்ததை மற்றவர்கள் சென்டிமெண்டாகப் பார்க்கிறார்கள். 

எம்.பியாக கனிமொழி பதவி ஏற்கும்போது பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். அடுத்து மோடி வைத்த விருந்தில் அவருக்கு நேராக உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார் கனிமொழி. அப்போதே பாஜகவினருடன் இணக்கமாக போக அவர் முடிவெடுத்து விட்டதாகக் கூறப்பட்டது. தற்போது கடவுள் சிலைகளை பற்றி பேசி இதன் மூலம் பாஜகவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள கனிமொழி காய் நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.


 

click me!