கனிமொழி- தமிழிசைக்கு எதிராக களமிறங்கிய இயக்குநர்... வாபஸ் பெற வைத்த நாம் தமிழர் கட்சி..!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2019, 12:02 PM IST
Highlights

ஸ்டெர்லைட் விஷயத்தை வைத்து தேர்தலில் களமிறங்க துடித்த இயக்குநர் வ.கவுதமன் பின்னர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். 
 

ஸ்டெர்லைட் விஷயத்தை வைத்து தேர்தலில் களமிறங்க துடித்த இயக்குநர் வ.கவுதமன் பின்னர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். 

தன்னை ஸ்டெர்லைட் நாயகனாக நினைத்தே அவர் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்க முயன்றார். ஆனால், 13 ஊழியர்கள், ஆயிரக் கணக்கானோரின் போராட்டத்தை தன் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு என அவருக்கு உணர்த்தி இருக்கிறார்கள்  தூத்துக்குடி மக்கள். வேட்புமனு தாக்கல் செய்ததும் முக்கிய பிரமுகர்களை போனில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு கேட்டுள்ளார். அப்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நாமெல்லாம் கலந்து கொண்டோம். நாமெல்லாம் ஒரே கொள்கை உடையவர்கள் உணர்ச்சிவயப்பட்டு பேசியுள்ளார். அப்படி திருநெல்வேலையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல பிரமுகர் ஒருவருக்கும் போனை போட்டுள்ளார். 

‘எனக்கு ஆதரவாக உங்கள் கட்சி வேட்பாளரை தூத்துக்குடியில் வாபஸ் பெற வையுங்கள்’ என கவுதமன் கேட்டுள்ளார். காது கொடுத்து கேட்டுக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல பிரமுகர், அப்படியே நமது கட்சி நிர்வாகிகளிடமும் பேசி விடுங்களேன் என போனை ஒருவர் மாற்றி, ஒருவராக கொடுத்தாராம்.

10 பேரிடமும் போன் போனில் விளக்கிய கவுதமனுக்கு இறுதியில் இவர்கள் நமக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் என்கிற முடிவுக்கு வந்துள்ளார். தூத்துக்குடியில் செய்த மனுத்தாக்கலை வாபஸ் பெற்றார். அதற்கு அவர் கூறிய காரணம் தமிழிசை வேட்பு மனுவில் தவறான தகவல் கொடுத்துள்ளார் என்கிற சப்பை காரணத்தை காட்டி விலகிக் கொண்டார். தனக்கு பிரசாரம் செய்ய சென்னையில் இருந்து ஆட்களை அழைத்து செல்ல முடிவு செய்து இருந்தாராம். 

click me!