திருப்பதியை விமர்சித்து விட்டு திருச்செந்தூரில் தரிசனம்..! கனிமொழியை கண் சிவைக்க வைத்த டிடிவி..!

Published : Apr 09, 2019, 11:22 AM ISTUpdated : Apr 09, 2019, 11:24 AM IST
திருப்பதியை விமர்சித்து விட்டு திருச்செந்தூரில் தரிசனம்..! கனிமொழியை கண் சிவைக்க வைத்த டிடிவி..!

சுருக்கம்

திமுக வேட்பாளர் கனிமொழி, திருப்பதி வெங்கடாசலபதியை விமர்சித்துவிட்டு, திருச்செந்தூரில் முருகப் பெருமானை வழிபடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக வேட்பாளர் கனிமொழி, திருப்பதி வெங்கடாசலபதியை விமர்சித்துவிட்டு, திருச்செந்தூரில் முருகப் பெருமானை வழிபடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ர்ல 18-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி அமமுக வேட்பாளர் புவனேசுவரனை ஆதரித்து டிடிவி தினகரன் ஆத்தூர் காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  

அப்போது அவர் பேசுகையில் இந்து மதத்தை குறை கூறுவதையே திமுக வழக்கமாக கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் பாராட்டுவார்கள் என நினைத்துக் கொண்டு, திருப்பதி வெங்கடாச்சல பெருமாளை எப்படியெல்லாம் பேசினார் கனிமொழி? ஆனால் அவரது தாயார் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகள் வெற்றிக்காக வழிபாடு செய்கிறார்.  

இந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை, எங்கள் குடும்பமே கோயிலுக்கு போகும் என்று இன்றைக்கு பேசுகிறார்கள். இந்த இரட்டை வேடம் எதற்கு? அரசியலில் மதத்தை கலக்க வேண்டிய அவசியம் என்ன? ஜாதியை சொல்லி, மதத்தை சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் என்ன? ஜாதி, மதம் மூலம் நம்மை பிரிக்க முயற்சி செய்பவர்களை நீங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திமுக, பாஜகவின் பி டீமாக செயல்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை முதிர்ச்சி இல்லாதவர் என ஸ்டாலின் கூறினார். தற்போது அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகிறார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழ் மக்களின் நலனுக்காக உழைக்கும் அமமுகவின் சின்னமான பரிசு பெட்டகத்திற்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி கேட்டுக்கொண்டார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!