பிரச்சாரத்தின்போது செல்ஃபி எடுத்தவரை விரட்டி விரட்டி வெளுத்த பிரபல நடிகர்..!

Published : Apr 09, 2019, 11:03 AM IST
பிரச்சாரத்தின்போது செல்ஃபி எடுத்தவரை விரட்டி விரட்டி வெளுத்த பிரபல நடிகர்..!

சுருக்கம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சார குரல் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது. 

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சார குரல் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது. 
 
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. மாநில சட்டமன்றத்துக்கும் அன்றய தினமே தேர்தல் நடக்கிறது.

ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகின்றது. நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா ஹிண்டூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் சட்டமன்றத்துக்கு போட்டியிடுகிறார். விஜயநகரம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது கட்சித்தொண்டர் ஒருவர் வாகனத்தை நெருங்கி வந்து பாலகிருஷ்ணாவை ஃபோட்டோ எடுத்தார்.

இதனால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா வாகனத்தில் இருந்தவாரே செல்போனை தட்டிவிட முயற்சி செய்தார். அதில், வெற்றி பெறாததால் ஆத்திரத்துடன் கீழே இறங்கிய அவர், அந்த தொண்டரை விரட்டி விரட்டி தாக்கினார். பின்னர், வெறி கொண்டு அவரின் செல்போனை பிடுங்கி தொலைவில் வீசினார். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேற்கண்ட வீடியோவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணா இதுபோல செயல்படுவது முதல்முறை இல்லை. சமீபத்தில், தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை கொன்று விடுவேன் என்று மிரட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?
அண்ணாமலையுடன் கை கோர்க்கும் லாரன்ஸ்..? தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகிறதா..?