மக்களவைத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யாரு ? ஜோதிடர்களின் ஆருடம் !!

By Selvanayagam PFirst Published Apr 9, 2019, 10:47 AM IST
Highlights

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மோடி அல்லது காங்கிரசின் ராகுல் இதில் யார் ஜெயிப்பார்கள் என ஜோதிடர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் அனைவருமே மோடி தான் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 17 ஆவது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலும், தமிழகத்தில், 18, புதுச்சேரியில் ஒன்று என, 19 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், வரும், 18ம் தேதி நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பல கருத்துக் கணிப்புகள் வெளியிட்டாலும் ஜோதிடர்களின் கருத்துக் கணிப்பு எப்படி இருக்கிறது என்பது பலரும் எதிர்பார்த்துதான். இது தொடர்பாக பல ஜோதிடர்கள் தங்களமு ஆரூடத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார் 

இவர் மோடியே  மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளார். எதிரிகளை வென்று, ஆட்சியை கைப்பற்றுவார். ஓட்டு எண்ணிக்கை, மிதுன லக்கினத்தில் துவங்குவதால், மிதுனத்திற்கு, 10ம் அதிபதியாக, குருவின் வீடான மீனம் இருப்பதால், ஆன்மிகத்தில் ஈடுபாடு உடைய ஒரு கட்சியே, மீண்டும் ஆட்சி அமைக்கும். தேர்தல் காலத்தில், கடும் எதிர்ப்புகள் இருப்பது போல தோற்றமளித்தாலும், தேர்தல் முடிவுகள், இவருக்கு சாதகமாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி நேற்று வரை நட்புடன் இருந்தவர்களாலேயே, தோற்கடிக்கப்படுவார்; தேர்தல் முடிவுகள், இவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, செல்வாக்கிற்கு பாதகத்தை உண்டாக்கும். கட்சிக்குள்ளும் தலைமையை எதிர்த்து, பூசல் ஆரம்பமாகும்.மாநில கட்சிகளால், இவருடைய அரசியல் பயணத்தில் தடங்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில், கடும் போட்டி நிலவுவது போல தோன்றினாலும், தேர்தல் முடிவுகள், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே இருக்கும். தேர்தலில் இவருடைய தலைமையிலான கூட்டணி வெற்றி அடைவதுடன், சட்டசபை இடைத்தேர்தலிலும், இவருடைய கட்சி வெற்றி பெறும்; ஆட்சியை தக்க வைப்பார்.

திமுக தலைவர் ஸ்டாலின்: எதிர்பார்த்த வெற்றியை எட்ட முடியாமல் போகலாம். தேர்தல் முடிவுகள், இவருக்கு சாதகமும் இல்லாமல், பாதகமும் இல்லாத நிலையை உண்டாக்கும், இவருடைய கூட்டணி கட்சி, தோல்வியை சந்திக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள், விழலுக்கு இறைத்த நீராக மாறி விடும். 


கடைசி நேரத்தில் நிகழும், எதிர்பாராத திருப்பங்களால், இவருடைய கூட்டணியின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர் தினகரன்: சந்திரன், சனி, கேது மூன்றில் இருப்பது, மிகப் பெரிய பலவானாக இவரை காட்டும். ஆனால் தேர்தல் முடிவுக்ள  இவருக்கு எதிராகவே அமையும்

தேர்தல் முடிவுகள், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுக்கு படிப்பினையை உண்டாக்கும்; அரசியல் மீது, இவர் கொண்டுள்ள ஈடுபாட்டை, இத்தேர்தல் யோசிக்க வைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் சிவ அண்ணாமலை தேசிகன், புவனகிரி

நம் நாட்டின் நட்சத்திரம் பூசம்; ராசி கடகம். தற்போது, 2025 வரை, சந்திர திசையின் காலம். பிரதமர் மோடியின் லக்னம் விருச்சிகம். பிறந்த நட்சத்திரம் அனுஷம்; ராசி விருச்சிகம். காங்கிரஸ் தலைவர் ராகுலின் லக்னம், மகரம்; நட்சத்திரம் கேட்டை; ராசி விருச்சிகம். மோடிக்கும், ராகுலுக்கும், நாட்டிற்கும், சந்திர திசை நடக்கும் காலம் என்பது ஆச்சரியமானது.

கிரக நிலைகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி, 309 இடங்களையும், ராகுல் கூட்டணி, 99 இடங்களையும், மூன்றாவது அணி, 125 இடங்களை பெறும். தமிழகத்தை பொறுத்தவரை, லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 28 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி, 12 இடங்களிலும் வெற்றி பெறும்.தமிழக சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 12 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களிலும், தினகரன் கட்சி இரண்டு இடங்களிலும், வெற்றி பெற வாய்ப்புண்டு என தெரிவித்துள்ளார்.. 

ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம் 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகளை சமாளிக்கும் வலிமையை வழங்கினாலும், மறுபக்கம் வேதனை விளிம்பில், அரசியலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால், வெற்றி இலக்கை அடைய முடியும்.
மீண்டும் ஒரு முறை அரியணை ஏறுவது சிரமம். தோல்வி பயம் எழும்; 

ராகுல் காந்தி அரசியலில் இலவு காத்த கிளியாக இருந்த நிலை மாறும். அதிநவீன யுக்திகளை கையாண்டு, வெற்றிகளை காண்பார். எதிரிகள் பலவீனம் அடைவர்.


வெற்றியின் இலக்கை தொட, கிரகங்கள் துணையாக உள்ளன. இவரது கூட்டணி கட்சிகள் இமாலய வெற்றி பெறும்.ஸ்டாலின்: குரு அதிகாரம் பெற்று பலமான நிலையில் உள்ளதால், பல வெற்றிகள் வந்து சேரும். வெற்றியின் உயரத்தை அடைய, குருவின் அதிகாரம் துணைபுரிய உள்ளது. 

தமிழகத்தில், லோக்சபா தொகுதிகளில், 24 முதல், 28 வரையும், சட்டசபை இடைத்தேர்தலில், ஏழு தொகுதிகளிலும், தி.மு.க., அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.இ.பி.எஸ்., முதல்வர்: குரு பகவான், 10ம் இடத்தில் அமர்ந்து, பதவியை ஆட்டம் காண வைத்த நிலை மாறி, குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து, சுப தன்மையை பெற்று, பல வெற்றிகளை வழங்க உள்ளார்.

இவர் சார்ந்துள்ள கூட்டணி, எட்டு முதல், 12 இடங்களை பெறும். ஜனன கால ஜாதகப்படி, எதிர்பார்த்த வெற்றிகள் அடைவது கடினம்.அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர் தினகரன்: சறுக்கல்கள் இனி இருக்காது; எதிரிகளின் கனவு பலிக்காது. மக்களவைத் தொகுதிகளில், நான்கில் வெற்றி வாய்ப்பு உள்ளது. 


ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு 

பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகத்தில், மிக முக்கிய பங்கு வகிப்பது, நீசபங்க ராஜயோகம். இதனால், மீண்டும் பிரதமராகும் யோகம் நன்றாக உள்ளது. எனினும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவை. தற்சமயம் நடக்கும், ராகு, கேது பெயர்ச்சிகள், சரியான போட்டியை ஏற்படுத்தும். எனினும், முடிவுகள் வரும் நேரத்தில், கோச்சாரம் மற்றும் தசா புத்திகளின்படி, மீண்டும் பிரதமராகும் யோகம் உண்டு.

இவர் கடந்த முறையை விட, அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. முடிவுகள் வரும் போது, மாறுபட்ட கொள்கை உடையவர்களின் ஆதரவு கிடைத்தால், ஒரு யோகம் உண்டாகலாம்.

10ம் இடத்தில், சுப கிரகங்களின் ஆதிக்கம் நன்றாக உள்ளதால், ஆட்சியை தொடர, எந்தவித சங்கடங்களும் இல்லை. எதிரிகள் எவ்வளவு இடையூறு கொடுத்தாலும், ஆட்சியை தொடரும் வாய்ப்பு அதிகம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இவருக்கு கடந்த தேர்தலை விட, இந்த தேர்தல் சாதகமாக உள்ளது. மீண்டும் கட்சியினர் உற்சாகம் அடையும் அளவிற்கு, வெற்றிகளை பெறுவார்.தினகரன்: மற்றவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு, அதிக ஓட்டுகளைப் பெறுவார்.பொதுவாக சொல்லப் போனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு, மோடி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம்.

ஜோதிடர் ஆர்.கே.வரதராஜ், காஞ்சிபுரம் 

மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக, 'ஜோதிட முறையில், எந்த கட்சி எவ்வளவு வெற்றி பெறும்' என, கணிப்பதில் சற்று சிரமங்கள் காணப்படுகின்றன. மேலும், சில முக்கிய கிரகங்கள் காரணமாக, கலவரங்களுடன் தேர்தல் நடக்கும்.தேர்தலில், மத்தியில் ஆளும், பா.ஜ., கூட்டணி, பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வாய்ப்பு அதிகம். பா.ஜ., கூட்டணி, 283 லிருந்து, 303 இடங்களை கைப்பற்றலாம். 

தமிழகத்தை பொறுத்தவரை, யாருக்கும் எதிர்பார்த்த, பெரும்பான்மையான வெற்றி கிடைக்க வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க., கூட்டணி, 21 லிருந்து, 22 இடங்களை கைப்பற்றலாம்.ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,விற்கும், 20 இடங்களில் வெற்றி வாய்ப்புகள் காணப்படுகின்றன. 
       
எனினும், 11 இடங்கள் இழுபறியாகவே இருக்கும். பெரும்பான்மையான பெண் வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பா.ம.க., - காங்., - பா.ஜ., போன்ற கட்சிகள், நான்கு இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என . அவர்கள் கணித்துஉள்ளனர்.

click me!