உள்ளூரில் ஒண்ணும் செய்ய முடியாதவரு வெளிநாட்டுக்குப் போயி என்ன செய்யப் போறாரு… எடப்பாடியைக் கலாய்த்த கனிமொழி !!

By Selvanayagam PFirst Published Aug 28, 2019, 7:33 PM IST
Highlights

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி எந்த முதலீடும் வராத நிலையில், வெளிநாட்டிற்கு சென்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார் என்று  கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
 

திமுக  கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி சென்ற கனிமொழி எம்.பி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது என கூறினார்.

இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என குறிப்பிட்டார்..

தற்போது ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. எனவே ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும்.” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப் பயணம் பற்றி பேசிய அவர், ” தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி எந்த முதலீடும் வராத நிலையில், இவர் வெளிநாட்டிற்கு சென்று என்ன செய்கிறார் என்று பார்ப்போம்'' என தெரிவித்தார்

click me!