கடவுள் நம்பிக்கை என்பது சாய்ந்து கொள்ள ஒரு தோள்...! என் மகனை இஷ்டப்படி விட்டுவிட்டேன் கனிமொழி பேட்டி..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 3:08 PM IST
Highlights

இதன் மூலம் கடந்த காலங்களில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசியது போலவே கனிமொழியும் பேசியிருக்கிறார். கடவுளை வணங்குவதை தன்னுடைய மகனின் விருப்பத்தின் படியே விட்டு இருக்கிறார். 

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசியது போலவே கனிமொழியும் பேசியிருக்கிறார்.

திமுகவின் கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இருந்தாலும் அந்த கட்சியில் கடவுளை வணங்குவரும் கட்சியில் இருக்கிறார்கள். கடவுளை வணங்காதவர்களும் இருக்கிறார்கள்.  பெரியார் பாசறையில் இருந்து வந்த கருணாநிதி தீவிர நார்த்திக கொள்கையை பின்பற்றியவர் என்றாலும் அக்கட்சியில் உள்ளவர்கள் கருணாநிதியை பின்பற்றாதவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். 

கருணாநிதி வீட்டிலேயே உள்ள பெண்கள் துணைவியான ராசாத்தி அம்மாள், அவரது மகளான செல்வி, அவரது மருமகளான துர்கா போன்றோர் வெளிப்படையாக கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். கருணாநிதியை பின்பற்றி அரசியலில் உள்ள மு.க.ஸ்டாலின், கனிமொழி போன்றோர்  நார்த்திகர்களா தங்களை வெளிப்படுத்தி வருபவர்கள். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களை விமர்சிப்போர் இங்கு அதிகம் பேர் உண்டு. தங்கள் வீட்டு பெண்கள் கடவுள் நம்பிக்கை இருப்பதை பற்றி பலமுறை கருணாநிதி கூறியுள்ளார். அதேபோல், ஸ்டாலின் பேசியுள்ளார். அவருடைய உரிமை, அருடைய எண்ணத்தில் தலையிட தாங்கள் விரும்பவில்லை. குடும்ப பெண்களின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில், கனிமொழியும் தான் குடும்பத்தில் கடவுள் நம்பிக்கை இருப்பது பற்றி பேசியுள்ளார். 

அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த கனிமொழி தன் மகன் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். அதில், பாட்டி உள்ளிட்டோர் கடவுளை வணங்கி வருகின்றனர். ஆனால், நீங்கள், தாத்தா எல்லோரும் கடவுளை வணங்குவதில்லை. நான் கடவுளை  நம்புவதா வேண்டாமா என்று கேட்டான். அப்போது, அதற்கு நான் சொன்ன பதில். இது நீ எடுக்க வேண்டிய முடிவு. உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன்ன நம்பக்கூடிய இடத்தில் இருந்து வரவேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது  சாய்ந்து கொள்ள ஒரு தோளாக இருக்கும். அது இல்லாத பட்சத்தில் உன்னோட தோள் நீ தான். நீ எனக்காகவோ, தாத்தாவுக்காகவோ, பாட்டிக்காகவோ எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று கூறினேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த காலங்களில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசியது போலவே கனிமொழியும் பேசியிருக்கிறார். கடவுளை வணங்குவதை தன்னுடைய மகனின் விருப்பத்தின் படியே விட்டு இருக்கிறார். 

click me!