தோவாளை மார்க்கெட்டில் தொக்கா மாட்டிய கனிமொழி.. தலைதெறிக்க ஓடவிட்ட பூ வியாபாரிகள்.. தரமான சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2021, 4:31 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் மட்டுமே எங்கள் வாழ்வு மேம்பட்டது, நீங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களுக்கு ஒன்றும் செய்யாமல், இப்போது எங்களை சந்திக்க வருவதன் நோக்கம் என்ன என கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் வியாபாரிகளை சந்தித்த கனிமொழியிடம் வியாபாரிகள் கேள்வி சரமரியாக கேள்வி  

அதிமுக ஆட்சியில் மட்டுமே எங்கள் வாழ்வு மேம்பட்டது, நீங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களுக்கு ஒன்றும் செய்யாமல், இப்போது எங்களை சந்திக்க வருவதன் நோக்கம் என்ன என கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் வியாபாரிகளை சந்தித்த கனிமொழியிடம் வியாபாரிகள் கேள்வி சரமரியாக கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலர் சந்தையாக தோவாளை மலர் சந்தை உள்ளது தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா பகுதிகளில் விளைவிக்கப்படும் மலர்கள் தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

திருவிதாங்கூர் சமஸ்தான காலம் முதல் புகழ் பெற்று திகழும் இந்த மலர் சந்தை கடந்த திமுக ஆட்சியில் காவல்கிணறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள் கட்டப்பட்டு இப்போதும் பயனற்று கிடக்கிறது. வியாபாரிகள் தாங்கள் தொடர்ந்து தோவாளை மலர் சந்தையில் வியாபாரம் செய்வோம் எங்களுக்கு அதற்கான உதவிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு மாண்புமிகு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு புதிதாக அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டி மீண்டும் தோவாளை மலர்ச்சந்தையை வியாபாரிகளுக்கு அளித்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று தோவாளை மலர் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

வியாபாரிகள் மும்முரமாக வியாபாரம் செய்துகொண்டிருந்த நேரத்தில் முகக்கவசம்கூட அணியாமல் அங்குவந்த கனிமொழியிடம், ஒழுங்காக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மலர் சந்தையை மாற்ற முயற்சித்தது திமுகதான். ஆனால் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு தான் எங்களுக்கு புதிதாக கடைகள் கட்டி தந்து இன்றும் எங்கள் வாழ்வை மேம்படுத்தி வருகிறது.  ஆனால் இந்த சந்தையே இங்கு செயல்பட கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது. உங்கள் ஆட்சிக் காலத்தில் வியாபாரிகளின் நலனில் அக்கறை காட்டாமல் வியாபாரிகள் நலனை பாதிக்கும் செயல்களை மட்டும் செய்து விட்டு இப்போது எங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பது எந்தவகையில் நியாயம் என்றும்,  திமுக ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கடந்த முறையும் நீங்கள் கூறினீர்கள், ஆனால் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றவில்லை.

ஆனால் மறுபடியும் எங்களை தேடி வருவதன் நோக்கம் என்ன என்று வியாபாரிகள் கனிமொழியிடம்  சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அதை எதிர்கொள்ள முடியாத கனிமொழி அவசரம் அவசரமாக தோவாளை மலர் சந்தை விட்டு வெளியேறி அங்கிருந்து வேகதாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

click me!