கறுப்பர் கூட்டத்திற்கெதிரான இந்து எழுச்சியை திசை திருப்ப கனிமொழி நாடகம்... ஹெச்.ராஜா சந்தேகம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2020, 6:16 PM IST
Highlights

திக, திமுக வின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என விமா நிலையத்தில் கனிமொழியிடம் இந்தி தெரியுமா? என அதிகாரி கேட்டதாக கூறும் சம்பவம் இருக்கமால் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 

திக, திமுக வின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என விமா நிலையத்தில் கனிமொழியிடம் இந்தி தெரியுமா? என அதிகாரி கேட்டதாக கூறும் சம்பவம் இருக்கமால் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.  அப்போது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், ‘’இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். 

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் எனத் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். திக, திமுக வின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!