கொரோனாவுக்கு மத்தியில் போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு..!! பயங்கர குஷியில் மக்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2020, 5:22 PM IST
Highlights

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் (contract carriage)குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும், பேருந்து தேவைப்படுவோர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு தொலைபேசியில் அழைக்கலாம் என  தமிழ்நாடுஅரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள், பணிக்கு வர ஏதுவாக தேவைக்கேற்ப பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 30-7-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு வரும் ஆகஸ்டு திங்கள்-31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தற்போது 50% பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கபட்டுள்ளார்கள். 

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் (contract carriage)குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர், tnexpress16gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 9445014402-  9445014416-  9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!