கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடலை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நிறுத்த சொன்னது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை.! தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுக- பாஜக இடைய கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியும் விமர்சித்தும் வருகின்றனர். எதோ ஒரு காரணம் கிடைக்காத என இரு தரப்பும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் இதற்கு ஏற்றார் போல் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரமானது தீவிரம் அடைந்துள்ளது. பாஜக-காங்கிரஸ் கட்சிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது.
இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அண்ணாமலை தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீதி, வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா பாடிக்கொண்டிருந்த தமிழ்தாய் வாழ்த்து பாடலை கேட்டதும் தமிழ் பாட்டா நிறுத்து, நிறுத்து என கூறினார். இதனையடுத்து அடுத்த சில நொடிகளில் இந்த பாடல் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேடையில் இருந்த அண்ணாமலை எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தார். இதனிடையே கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) >இதனிடையே திமுக எம்பி கனிமொழி கருணாநிதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.இதையும் படியுங்கள்
Watch Video: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!