குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்தார். அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.
தொழில்நுட்பக் கோளாறால் நேற்றைய பயணம் ரத்தானதால், இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளில் சென்னையில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ரூ.230 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடம் 6 தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையும் படிங்க;- எனக்கு போலீஸ் மேல டவுட்டா இருக்கு.. அந்த ரகசியம் கொலையாளிக்கு தெரிந்தது எப்படி? பாயிண்டை பிடித்த சிபிஎம்.!
அதன்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்தார். அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல்வர் ஸ்டாலின் சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது.
இதையும் படிங்க;- MK Stalin: விமானக் கோளாறு காரணமாக முதல்வரின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
ஆகையால், முதல்வரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் நேற்று ரத்தானதை அடுத்து, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.