ஆதரவாளர்களுக்கு மா.செ பதவி வேண்டும்! ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கனிமொழி!

By manimegalai aFirst Published Sep 28, 2018, 10:33 AM IST
Highlights

தி.மு.கவில் பெண்களுக்கு அதிகம் மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று அந்த கட்சியின் மகளிர் அளிச் செயலாளரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சகோதரியுமான கனிமொழி வெளிப்படையாக பேசியிருப்பது தி.மு.கவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான பிக்கியின் பெண்கள் பிரிவு கருத்தரங்கு நடைபெற்றது.கவிதை மற்றும் அரசியல் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு பேசினார். 

இதனை தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது பல்வேறு துறைகளில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கனிமொழி தெரிவித்தார். அரசியலில் கூட பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்று அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், தி.மு.கவில் மட்டும் என்ன பெண்களுக்க முக்கியத்துவம் கொடுத்துவிட்டார்களா என்று கேள்வி எழுப்பினர். 

இந்த கேள்விக்கு கனிமொழி ஆம் எனக்கு எம்.பி., பதவி கொடுத்துள்ளார்கள், பெண் ஒருவர் தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக உள்ளார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இரண்டு பெண்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்கிற ரீதியில் பதில் அளிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கனிமொழியோ ஆமாம் உண்மை தான், தி.மு.கவிலும் கூட பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறினார். 

மேலும் தி.மு.கவில் மாவட்டச் செயலாளர்களாக பெண்கள் இல்லை என்றும் கனிமொழி ஆதங்கப்பட்டார். மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மாவட்டச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கனிமொழி கூறியதை கேட்டு செய்தியாளர்களே அதிர்ச்சி அடைந்தனர்.தி.மு.கவில் கனிமொழி ஓரங்கப்படுவார் என்று யூகங்கள் எழுப்பப்பட்ட வருகிறது. 

உடன் பிறந்த சகோதரர் அழகிரியையே ஸ்டாலின் ஒதுக்கிய நிலையில் கனிமொழியை மட்டும் எப்படி கட்சியில் முன்னேற விடுவார் என்கிற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தி.மு.கவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கனிமொழி கூறியிருப்பது ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்க உள்ளதற்கான ஆயத்தம் என்றே பார்க்கப்படுகிறது.

click me!