விரட்டும் காவல் கூட்டம்... ஒடும் கறுப்பர் கூட்டம்.. சுரேந்திரனை சுளுக்கு எடுக்கப்போகும் போலீஸ்..!

By vinoth kumarFirst Published Jul 27, 2020, 1:04 PM IST
Highlights

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். 

பின்னர், கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர். மேலும், கறுப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். 

இதனையடுத்து, கறுப்பர் கூட்டம் சேனலுக்கு நிதி அளித்து வந்தவர்கள் யார் என்பது குறித்து, செந்தில்வாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், செந்தில் வாசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார். இந்நிலையில், செந்தில்வாசன், அவரது கூட்டாளி, சுரேந்தரன் நடராஜன் பின்னணியில், மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என போலீசார் பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்,  நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!