காமராஜர், ஜெயலலிதாவே தேர்தலில் தோற்றுபோனாங்க.. நான் எம்மாத்திரம்..? அதிமுக மாஜி அமைச்சர் விரக்தி..!

By Asianet TamilFirst Published Jul 19, 2021, 9:06 PM IST
Highlights

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். காமராஜர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களே தேர்தலில் தோல்வியைச் சந்தித்த்திருக்கிறார்கள். இதில், நான் தோல்வியடைந்தது எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
 

ஜோலார்பேட்டையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி பங்கேற்று பேசினார். “சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் நான் பொறுப்பாளராகப் பணி செய்தேன். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். என் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் எனக்காகப் பணி செய்தனர். அவர்கள் சரியாகப் பணியாற்றாத காரணத்தால் நான் சொற்ப வாக்குகளில் வெற்றியை இழந்தேன்.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். காமராஜர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களே தேர்தலில் தோல்வியைச் சந்தித்த்திருக்கிறார்கள். இதில், நான் தோல்வியடைந்தது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகுதான். அது அவமானம் இல்லை. வெற்றியை எப்படி ஏற்கிறோமோ அதைப் போலவே தோல்வியையும் ஏற்க வேண்டும். தோல்வியடைந்து விட்டோமே என வருந்தக் கூடாது. அடுத்து முறை வெற்றிக்கு என்ன வழி என்பதை மட்டுமே ஆராய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும். அதைக் குறிக்கோளாக எண்ணி எல்லோரும் பணியாற்ற வேண்டும்.” என்று கே.சி.வீரமணி தெரிவித்தார்.

click me!