70 நாட்களில் அதிரடி ஆக்‌ஷன்.. யாரா இருந்தாலும் சும்மா விடமாட்டோம் என கெத்து காட்டும் அமைச்சர் சேகர் பாபு..!

By vinoth kumarFirst Published Jul 19, 2021, 7:17 PM IST
Highlights

கோயில் சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி வெளிப்படை தன்மையோடு நடவடிக்கை எடுக்கப்படும். திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பு, கோவில் சொத்துகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கோயில்களை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் மற்றும் கோதண்ட ராமர் ஆலயங்களில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அரசு பொறுப்பேற்ற 70 நாட்களில் ரூ.600 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயிலில் திருப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  

கோயில் சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி வெளிப்படை தன்மையோடு நடவடிக்கை எடுக்கப்படும். திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கோயில் சிலைகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பு, கோவில் சொத்துகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

click me!