குவியும் கோடிகள்... அதிகார மையமாகும் இயக்குநர்களின் உதவியாளர்கள்..! ​

By Thiraviaraj RMFirst Published Jul 19, 2021, 7:15 PM IST
Highlights

பெரிய பதவிகளை அலங்கரிக்கும் உதவியாளர்கள் மட்டும் 10 வருடம் முதல் 25 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ஆட்சிகூட ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாறுகிறது. அமைச்சர்களின் இலாகாக்களே அவ்வப்போது மாற்றத்திற்கு உண்டாகிறது. சிலநேரங்களில் பதவி பறிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் மாற்றலாகி செல்வது வாடிக்கையாகவே இருக்கிறது. கலெக்டர் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருக்கக்கூடாது  என்கிற விதியே இருக்கிறது. ஆனால், பெரிய பதவிகளை அலங்கரிக்கும் உதவியாளர்கள் மட்டும் 10 வருடம் முதல் 25 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் உதவியாளர்கள் தொழிலாளர் நல வாரிய கமிஷனரின் உதவியாளர்கள்,  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரின் உதவியாளர்கள், மின்சாரவாரியத்துறை இயக்குநரின் உதவியாளர்கள், சுகாதரத்துறை இயக்குநரின் உதவியாளர்கள், நெடுஞ்சாலை துறை இயக்குநரின் உதவியாளர்கள், உயர்கல்வித்துறை இயக்குநரின் உதவியாளர்கள்,  சென்னை மாநகராட்சி கமிஷனரின் உதவியாளர்கள், பதிவு துறை தலைவரின் உதவியாளர்கள், எனர்ஜி துறை செயலாளரின் உதவியாளர்கள்,  உள்ளாட்சி துறை நிர்வாக இயக்குநரின் உதவியாளர்கள், உள்ளாட்சி துறை செயலாளரின் உதவியாளர்கள், வீட்டுவாரிய வசதிதுறை செயலாளரின் உதவியாளர்கள்,  சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கமிஷனரின் உதயாளர்கள், போலீஸ் கமிஷனரின் உதவியாளர்கள், உயர்கல்விதுறை செயலாளரின் உதவியாளர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உதவியாளர்கள், மாவட்ட எஸ்.பி.க்களின் உதவியாளர்கள், மதுவிலக்கு எஸ்.பி.,யின் உதவியாளர்கள் கடந்த 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 

ஒவ்வொரு துறைக்குமான இயக்குநர்களோ, கமிஷனர்களோ, செயலாளர்களாக பொறுப்பு வகித்து வருபவர்களின் பதவி முக்கியமானது.  துறை ரீதியாக முக்கியமானதும், முடிவெடுக்க வேண்டியதுமானது இவர்களின் பொறுப்பு. அரசு பதவிகளில் உயர்ந்த பதவி. அவ்வப்போது துறை இயக்குநர்கள், கமிஷனர்கள், கலெக்டர்களே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். ஆனால், அவர்களது உதவியாளர்கள் மட்டும் பல ஆண்டுகளாக மாற்றலாகாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருவகிறார்கள். இயக்குநர்கள் மாறினாலும் துறை ரீதியான அனைத்து தகவல்களும் இவர்களுக்கு அத்துபடி என்பதால் இவர்கள் காட்டில் மழைதான்’’எனக் குற்றசாட்டு எழுந்துள்ளது.

கலெக்டரையோ, இயக்குநர்களையோ, கமிஷனர்களையோ பார்க்க வருபவர்களை அனுமதிப்புதும், நிராகரிப்பதும் இவர்களது விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது.  அப்படி பார்க்க வருபவர்களிடம் அந்த காரியத்தின் வீரியப்படி இவர்கள் கலெக்சனை அள்ளிக் குவிப்பதாக கூறப்படுகிறது. அரசு சம்பளம் போக இப்படி சம்பாதிக்கும் ஒரு சில துறைகளின் இயக்குநர்களின் உதயவியாளர்கள் கோடி கோடியாய் சொத்து சேர்த்துள்ளனர். அந்தப்பணத்தில் அண்ணாநகர், முகப்பேர் போன்ற பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளை வாங்கிப்போட்டுள்ளனர். டாஸ்மாக் இயக்குநரின் உதவியாளரெல்லாம் பல கோடிகளை சேர்த்து வைத்துள்ளார்’’என அதிர வைக்கிறார்கள்.  

எல்லாதுறைகளிலும், அரசு அலுவலர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் மாற்றலாவதை போல இந்த உதவியாளர்களையும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் அரசு அலுவலர்களிடையே எழுந்துள்ளது. 

click me!