நோட்டாவிடம் தோற்றுப் போன கட்சியை எங்க டார்ச் லைட் அடித்துதான் தேடணும்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட கமல்...!

By vinoth kumarFirst Published Mar 11, 2019, 10:09 AM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று தேர்தல் ஆணையம் ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியது. இந்தச் சின்னம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலுக்கு கமல்ஹாசனம் சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் நோட்டாவால் காணாமல் போன பாஜகவை பேட்டரி டார்ச் வைத்து தேடப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று தேர்தல் ஆணையம் ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியது. இந்தச் சின்னம் தொடர்பாக மத்திய அணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலுக்கு கமல்ஹாசனம் சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் நோட்டாவால் காணாமல் போன பாஜகவை பேட்டரி டார்ச் வைத்து தேடப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த அவர், பொருத்தமான சின்னம் தான் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகதைக் காப்பதிலும் இந்திய அரசியலிலும் புது ஒளியைப் பாய்ச்சுவோம்’ என கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுகிறேன், எந்தத் தொகுதி என்ாதை விரைவில் அறிவிப்பேன் என்றார். 

இந்நிலையில் மத்திய பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல் கட்சியின் சின்னம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அந்த ‘டார்ச்லைட்டை’வைத்துக்கொண்டு கமல்ஹாசன், மய்யத்தைத் தேடுவார்’என்று விமர்சித்திருந்தார். 

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல் நோட்டாவால் காணாமல் போன பாஜகவை பேட்டரி டார்ச் வைத்து தேடப் போவதாக கமல்ஹாசன் பதிலளித்தார். பாஜகவை தேடப் போவதாகக் கூறி டார்ச் லைட் வெளிச்சத்தையும் காண்பித்தார். நோட்டா சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கினால் சரியாக இருக்கும் என்று அவர் விமர்சித்துள்ளார். 

click me!