அதிமுக கூட்டணியில் வெறும் நான்கு தொதிகளுக்கு செட்டில் ஆனதால் தேமுதிகவில் அதிருப்தி குரல்கள் எழுந்து வருகின்றன.
அதிமுக கூட்டணியில் வெறும் நான்கு தொதிகளுக்கு செட்டில் ஆனதால் தேமுதிகவில் அதிருப்தி குரல்கள் எழுந்து வருகின்றன.
கடந்த 15 நாட்களாக இழுத்துக் கொண்டிருந்தது இந்த வெறும் 4 சீட்டுகளுக்கு தானா என்று மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக பார்த்தசாரதி, சுதீசை தொடர்பு கொண்டு கேட்க ஆரம்பித்துள்ளனர். திமுகவும் மூன்று மக்களவை ஒரு மாநிலங்களவை கொடுக்க முன்வந்தது. அப்படி இருக்கும் போது எதற்காக நம்மை அவமானப்படுத்திய அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும என்றும் அவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக சென்றதற்கு வைட்டமின் ப தான் காரணம் என்று சிலர் கொளுத்தி போட்டுள்ளனர். திமுக தரப்பு வைட்டமின் ப தர மறுத்த காரணத்தினால் தான் அங்கு கூட்டணிக்கு செல்லவில்லை. அதே சமயம் அதிமுக தரப்பு வைட்மின் பவை எதிர்பார்த்த அளவிற்கு கொடுத்து கூட்டணியை செட்டில் செய்துள்ளதாகவும் பலரும் பேசி வருகின்றனர். இதனையும் சுட்டிக்காட்டி அப்படி என்றால் பணத்திற்கு தான் நாம் கட்சி நடத்துகிறோமா என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
கேப்டனுடன் எப்போதும் நெருக்கமாக இருக்க கூடியவர் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன். அவர் நேற்று அதிமுக கூட்டணி உடன்பாடு சமயத்தில் கிரவுன் பிளாசாவில் இல்லை. இதே போல் கேப்டனுக்கு ஒரு விதத்தில் உறவு முறையில் வரும் சேலம் மாவட்டச் செயலாளர் இளங்கோவனும் ஹோட்டலுக்கு செல்லவில்லை. இதேபோல் தேமுதிகவில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களிலேயே மிகவும் ஆக்டிவானவர் விழுப்புரம் எல்.வெங்கடேசன், அவரும் கூட அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
இப்படி மாவட்டச் செயலாளர்கள் மட்டும் இல்லாமல் விஜயகாந்தின் மைத்துனருக்கு கூட அதிமுக கூட்டணியில் உடன்பாடு இல்லை என்கிறார்கள். பிரேமலதா பேச்சை தட்ட முடியாமல் அவர் இந்த விவகாரத்தில் கம்முனு உட்கார்ந்து இருந்ததாகவும் சொல்கிறார்கள். தேமுதிகவின் இந்த கூட்டணி நிலைப்பாட்டில் தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பக்கம் தாவ நேரம் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்.