
நடிகர் கமலஹாசன் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வரும் 21 ஆம் தேதி அறிவிப்பேன் என உறுதியாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய கட்சியை மேலும் வலுப்படுத்த, பல அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை மற்றும் அவர்களது கருத்துக்களை பெற்று வருகிறார்.
நேற்றைய தினம் மூத்த தேர்தல் அதிகாரி சேஷனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகன்:
இந்நிலையில் நடிகர் கமலஹாசனை சந்திக்க ரசிகர் ஒருவர் இன்று ஆழ்வார் பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றுள்ளார். ரசிகர் சென்ற அந்த நேரத்தில் அங்கு கமலஹாசன் இல்லாததால் காவலாளி அவரை உள்ளே அனுப்ப மறுத்துள்ளார்.
இதனால் அந்த ரசிகர் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்த விஷயம் பற்றி அறிந்து அங்கு வந்த போலீசார். அந்த நபரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி ஆசையாக பார்க்க வந்த ரசிகரை அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.