
'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமலஹாசன், சென்னை ஆழ்வார் பேட்டையில், உள்ள தனது கட்சி அலுவலகத்தில். விவசாய பிரதிநிதிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளதாகவும். காவிரிக்காக தமிழகத்தில் 'குரல்' என்னும் தலைப்பில் களம் காண உள்ளதாகவும். இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம் என்று கூறினார்.
மேலும் ஒருமித்த கருத்துடையவர்கள் ஒரு மேடையில் அமர்ந்துள்ளோம் என்றும், காவிரியின் உரிமையை நிலைநாட்ட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, மே - 19 ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் தரவும், உரையாடல்களுக்கான கதவைத் திறக்கவும் களம் காண வருமாறு கோரிக்கை விடுத்தார்.
விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் தன்னை இணைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறிய கமல், காவிரியில் 400 டி.எம்.சி.யில் இருந்து படிப்படியாக நீரின் அளவு குறைந்ததால், வாரியம் அமைக்குமாறு கோரி விடுத்து படிப்படியாக உரிமைகளை இழந்து வருவதை மீட்போம் என்று கூறினார்.
மேலும் கட்சி என்ற வரைகோட்டைத் தாண்டி, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் நின்று ஒற்றுமை காண்போம் என்றும் கமல் தங்களுடைய ஒற்றுமையை பறைசாற்றியுள்ளார்.