உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி - எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய கமல்...!  

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
 உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி - எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய கமல்...!  

சுருக்கம்

kamalahaasan donation for tiruchi usha family

காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் சார்பாக ரூ. 10 வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.

அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டை மகளிர் தின நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் சார்பாக ரூ. 10 வழங்கி உத்தரவிட்டுள்ளார். 
 

மேலும் நிகழ்ச்சியில் பேசிய கமல், கண்டிப்பாக அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இந்த பணம் ஒரு ஈடாக இருக்காது எனவும் ஆனால் இதுவாவது அவரின் கணவருக்கு கிடைக்கட்டும் எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!
125 நாள் வேலையை கொடு, கூலியை கொடு, நீ எவன் பேருன்னா வச்சுட்டு போ....! முன்னாள் அமைச்சர் வீரமணி ஓபன் டாக்