பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகூட கமலுக்கு கிடைக்காது... கமலை மரண கலாய் செய்த மாஜி அமைச்சர்..!

Published : Jan 18, 2021, 09:09 PM IST
பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகூட கமலுக்கு கிடைக்காது... கமலை மரண கலாய் செய்த மாஜி அமைச்சர்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த வாக்குகள்கூட தேர்தலில் கமல்ஹாசனுக்கு கிடைக்காது அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வம் தெரிவித்துள்ளார்.  

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்று முத்தாய்ப்பாக சில விஷயங்களைப் பேசினார். “வாடகை பாக்கி வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கே வரவில்லை எனக் கூறிவிட்டார். டிடிவி தினகரனோ உலக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர்.
அடுத்து கமல்ஹாசன். பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள்கூட கமல் ஹாசனுக்கு தேர்தலில் கிடைக்காது. ரம்யா பாண்டியனுக்கு நானே 5 வாக்குகள் போட்டேன். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்து போகட்டும் என ஐந்து வாக்குகள் போட்டேன். ஆனால், அரசியல் களம் என்பது பிக்பாஸ் அல்ல. அங்கே விழுவதுபோல 3 கோடி, 4 கோடி ஓட்டுகள் விழுவதற்கு” என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!