
“வருக வருக புது யுகம் படைக்க” கட்சி, கொடி, கொள்கைகளைப் பற்றி மதுரையில் அறிவிக்க உள்ளதாகவும் நாளை துவங்கும் அரசியல் பயணத்துக்கு நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு முன் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் கமல்ஹாசன். நாளை தனது அரசியல் களத்தில் இறங்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அரிக்கவிருக்கும் நிலையில், ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அதே போல சில அரசியல் புள்ளிகளும் பங்கேற்க உள்ளார்களாம்.
இந்நிலையில், தமது ட்வீட்டர் பக்கத்தில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கமல். அதில், நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க #maiam இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது டுவீட் பதிவு செய்த மூன்றே நிமிடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.