'நடிகர் விஜயும் அரசியலுக்கு வரட்டுமே’ கமல் பச்சைக்கொடி!

By sathish kFirst Published Oct 5, 2018, 1:42 PM IST
Highlights

‘அரசியலில் இன்றைக்கு முக்கியமான பிரச்சினையே ஊழல்தான். அந்த ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கத்துணியும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? என்று கமல் கேள்வி எழுப்பினார்.

‘அரசியலில் இன்றைக்கு முக்கியமான பிரச்சினையே ஊழல்தான். அந்த ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கத்துணியும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? என்று கமல் கேள்வி எழுப்பினார்.

 சென்னை விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பத்திரியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த கமல் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை யாருக்கும் தேவை கிடையாது.

அதே போல் பெட்ரோல் விலையை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டு மிகக் குறைவான அளவில் குறைப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

 நடிகர் விஜயின் அரசியல் பேச்சு நன்றாக இருந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இன்றைக்கு இந்தியாவின் தலையாய பிரச்சினை ஊழல்தான்.அதை நன்கு புரிந்துகொண்டு விஜய் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். எனவே அவரை அரசியலுக்கு வரவேற்பதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை’ என்றார் கமல்.
 ஸோ இன்றைய தொலைக்காட்சி விவாத மேடைகளுக்கு ஒரு நல்ல டாபிக் கிடைத்திருக்கிறது.
கமலும் விஜயும் கைகோர்ப்பார்களா? விவாதிக்கலாம் வாங்க.

click me!